top of page
அவளுக்குப் பிடித்தது – சாரா ஜோலியன்-ஃபார்தெல்

அவளுக்குப் பிடித்தது – சாரா ஜோலியன்-ஃபார்தெல்

₹285.00 Regular Price
₹250.00Sale Price

பிரஞ்சுலிருந்து தமிழில்: சுபஸ்ரீ பீமன்


சுவிட்சர்லாந்தின் வாலாயிஸ் மலைக் கிராமத்தினர் தம் சிற்றூரின் பிற குடும்பங்களின் விவகாரங்களை அறிந்திருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாதது போலவே ஜீனுடைய தகப்பனின் வரம்பு மீறிய செயல்களையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர். அவள் கண்ட, அனுபவித்த, துன்புறுதல்களிலிருந்து விலகிவிட உண்டுறைப் பள்ளி உதவியதென்றாலும் மனநல மருத்துவரின் சிகிச்சையும் தொடர் தேவையானது.


லொசேன் நகர வாழ்வில் எதிர்ப்பட்ட சார்லட் போலத் துருவித் துருவி விவரங்களைக் கோராத மரீனுடன் காதல் வாழ்வில் களிக்கிறாள். பணியிடத்தில் பழக்கமாகும் பாலுடன் கொள்ளும் உறவு, தன் நெஞ்சம் நேர்ந்தவளுக்கு இழைக்கும் துரோகமென மருகுகிறாள்.


பொங்கி வழிந்த காதல், நெஞ்சக் குறுகுறுப்பு, நாண உளைச்சல், விலகிச் செல்லல், மீண்டும் சேர்தல், முடக்கிப் போட்ட உணர்ச்சியின் பாதிப்பு எனப் பலவற்றையும் எதிர்கொண்ட ஜீன், இறுதியில் தனக்குப் பிடித்ததைத் தெரிவு செய்கிறாள்.



Quantity
Expected to ship by Nov end
Green and Yellow Simple Clean Shoes Sale
Green and Yellow Simple Clean Shoes Sale
bottom of page