
அம்மாவின் உருவச்சித்திரம் மட்டுமல்ல, வாழ்க்கைப் பார்வையையும் உருவாக்கிக் கொள்ள முடிகிறது. அங்கங்கே தெறிக்கும் நகைச்சுவையும் சுயஎள்ளலும் வாய்விட்டுச் சிரித்தபடி வாசிக்கச் செய்கின்றன. ஆனால் துயர் சூழ்ந்த கணங்கள் பலவும் அடியோட்டமாகச் செல்கின்றன. ஒரு கட்டுரையை வாசித்ததும் அடுத்ததை நோக்கி மனம் தாவுவதைத் தவிர்க்க முடியாது. ஒரே மூச்சில் வாசித்து முடிக்கச் செய்யும் நூல் இது.
பெருமாள்முருகன்
(PERUMAL MURUGAN)

வசுதேந்த்ரா | VASUDHENDRA
கன்னட இலக்கியத்தின் முன்னணி எழுத்தாளரான வசுதேந்த்ரா (பி.1969), பெல்லாரி மாவட்டத்தின் சன்டூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இருபது ஆண்டுகள் ஐடி நிறுவனங்களில் வேலை செய்துவிட்டுத் தற்போது பெங்களூருவில் ‘சந்தா புஸ்தகா’ என்ற பதிப்பகத்தைத் தொடங்கி, கன்னடத்தின் இளம் எழுத்தாளர்களை அடையாளங்கண்டுப் பிரசுரிக்கிறார். இவருடைய படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை 'மோகனசாமி', 'ரேஷ்மி பட்டே' போன்றவை. 'அம்மாவை எனக்கு மிகவும் பிடிக்கும்' என்ற இந்த நூலின் மூலக் கன்னடப் படைப்புக்கு 2006-லும் 'தேஜோ-துங்கபத்ரா' நூலுக்கு 2019-லும் கர்நாடக சாகித்திய அகாதெமியின் விருதுகளைப் பெற்றுள்ளார்.